மாணவிகளுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையில்  'பிராஜக்ட் பள்ளிக்கூடம்' ..! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்ட போலீசார், பள்ளி மாணவிகளிடையே பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'பிராஜக்ட் பள்ளிக்கூடம்' என்ற நிகழ்ச்சியை தொடங்கியுள்ளனர். 

இந்த நிகழ்ச்சியின் படி, போலீசார் கோவை மாவட்டம் கோவில்பாளையம் அரசு பள்ளியைச் சேர்ந்த 34 மாணவிகளுக்கு 'பிராஜக்ட் பள்ளிக்கூடம்' நிகழ்ச்சியின் மூலமாக பயிற்சி அளித்தனர். ஆயுதப்படை வளாகத்தில் போலீசார் பயன்படுத்தும் துப்பாக்கிகள், லத்திகள், கலவர தடுப்பு உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவை குறித்து மாணவிகளுக்கு போலீசார் விளக்கி பேசினர்.

இதைத் தொடர்ந்து, மாணவிகளை துப்பாக்கி சுடும் மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு துப்பாக்கிகள் கொடுக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று, இதில் பங்கேற்ற மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Project School to ensure safety for girls


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->