வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ ரெயில் டிக்கெட் பெறுவதில் தாமதம் - நடந்தது என்ன?
problam buy metro train ticket from whatsapp
சென்னையில் பிரதான போக்குவரத்தாக ரெயில் சேவை உள்ளது. அதிலும் குறிப்பாக மெட்ரோ ரெயில் சேவை முக்கிய இடத்தை பிடித்துள்ளது. சென்னை மெட்ரோ ரெயிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். அப்படி பயணம் செய்ய விரும்புவோர் அதற்கான பயண சீட்டை வாட்ஸ்அப் மூலம் பெரும் வகையில் ஏற்பாடு செய்யப்படு இருந்தது.
இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரெயிலுக்கான டிக்கெட்டை வாட்ஸ்அப் மூலம் பெறுவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"வாட்ஸ்அப் ஆன்லைன் டிக்கெட்டுகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வாட்ஸ்அப் சாட்பாட் தற்காலிகமாக வேலை செய்யவில்லை. எனவே, அனைத்து பயணிகளும் சென்னை மெட்ரோ மொபைல் செயலி, பேடிஎம், போன்பே, சிங்கார சென்னை அட்டை மற்றும் சென்னை மெட்ரோ பயண அட்டைகள் போன்ற பிற முறைகள் மூலம் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சிரமத்திற்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன வருந்துகிறது. மேலும் தகவல் வரும் வரை பயணிகள் கவுண்டரிலும் டிக்கெட்டுகளைப் பெறலாம். தகவல்கள் விரைவில் புதுப்பிக்கப்படும்.” என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
problam buy metro train ticket from whatsapp