கடலூரில் ரயில் மோதி விபத்து: பள்ளி வேனில் உதவியாளர் இல்லாதது ஏன்..? தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்..! - Seithipunal
Seithipunal


கடலூர் செம்மங்குப்பம் அருகே குழந்தைகளை ஏற்றிக் கொண்டு சென்ற பள்ளி வேன், ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது, சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் மோதி விபத்துக்குள்ளானது. 03 மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் சாருமதி, நிமலேஷ், செழியன் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. 

இந்நிலையில், குறித்த வேனில் உதவியாளர் இல்லாதது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விளக்கம் கேட்டு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அத்துடன், இந்த விபத்து தொடர்பாக ரயில்வே கேட் ஊழியரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தமிழக அரசும், ரயில்வேத்துறையும் நிதியுதவி அறிவித்துள்ளன. தற்போது, உதவியாளர் இல்லாமல் பள்ளி வேனை இயக்கியது ஏன் என விளக்கம் கேட்டு அந்த பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Private school served notice asking why there is no assistant in the school van


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->