தமிழக காவல் துறையில் சிறப்பாந பணிக்காக 20 அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் பதக்கம் அறிவிப்பு..!
Presidents Medal announced for 20 officers for distinguished service in Tamil Nadu Police Department
2026-ஆம் ஆண்டு 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக காவல் துறையில் பணியாற்றும் 20 போலீஸ் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகளில் குடியரசு தலைவரின் தகைசால் பணிக்கான பதக்கம் 03 காவல் அதிகாரிகளுக்கும், மெச்சத்தக்க பணிக்கான பதக்கம் 17 காவல் அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான பதக்கம் தமிழக காவல்துறையைச் சேர்ந்த விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்பி கு.ராமச்சந்திரன், சென்னை தலைமையிடத்து க்யூ பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை கூடுதல் எஸ்பி ஜி.விஜய் ஆனந்த், மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் 09-ஆம் அணி உதவி தளவாய் சி.குமார் ஆகிய 03 அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

அடுத்ததாக, மெச்சத்தக்க பணிக்கான பதக்கங்கள், சேலம் மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பி மு.சோமசுந்தரம், நாகப்பட்டின மண்டல கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் எஸ்பி க.சிவசங்கர், திருப்பத்தூர் மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பி பொ.கோவிந்தராஜு, ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் உட்கோட்டம் டிஎஸ்பி செ.சண்முகம், ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் 13-வது அணி உதவி தளவாய் செ.மணிமாறன், தூத்துக்குடி மாவட்டம் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை இன்ஸ்பெக்டர் ஐ.ஜெயா பிரின்சஸ், சென்னை தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் செ.மதிமாறன் ஆகியோருக்கும்,

சென்னை பாதுகாப்புப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை இன்ஸ்பெக்டர் பெ.மாரியப்பன், நீலகிரி மாவட்டம் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை இன்ஸ்பெக்டர் கி.சரஸ்வதி, திருச்சி குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை கள்ளநோட்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சு.லட்சுமி, திருப்பூர் நகர குற்ற ஆவணக் காப்பக இன்ஸ்பெக்டர் ஜி.பத்தருன்னிசா பேகம், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் க.கோபால், சென்னை க்யூ பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை இன்ஸ்பெக்டர் சி.லட்சுமி, சென்னை இணையதள குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சு.மாலதி, சென்னை க்யூ பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை எஸ்ஐ நா.சதுரகிரி, திருச்சி தனிப்பிரிவு எஸ்ஐ ரா.செந்தில் குமார், சென்னை காவல் நுண்ணறிவு பிரிவு (1) எஸ்ஐ சி.பாஸ்கர் ஆகியோருக்கும் என 17 பேருக்கு வழங்கப்பட உள்ளது.
English Summary
Presidents Medal announced for 20 officers for distinguished service in Tamil Nadu Police Department