இண்டியா கூட்டணியில் திமுக இல்லை; மக்களவைத் தலைவர் தேநீர் விருந்தில் பங்கேற்றது குறித்து கனிமொழி எம்.பி விளக்கம்..! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்ததால், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு நேற்று இரவு வந்தடைந்தார்.அதன் பின்னர் இன்று காலை 08.15 மணிக்கு சென்னையில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் மீண்டும் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

அதற்கு முன்னதாக, விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது ''டெல்லியில் மக்களவைத் தலைவர் அளித்த தேநீர் விருந்தில் திமுக சார்பில் நீங்கள் பங்கேற்றது குறித்து சர்ச்சை எழுந்துள்ளதே?’ என்று கனிமொழியிடம் செய்தியாளர்கள் கேள்வி ஏகுப்பினர்.

அதற்கு அவர் பதிலளித்துள்ளதாவது;

''இதில் சர்ச்சை ஆவதற்கு என்ன இருக்கிறது? நாடாளுமன்றத்தில், எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகளை மாற்றித்தர வேண்டும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் ஏற்கெனவே கேட்டிருந்தோம். அது தொடர்பாக அவரை நேரில் சந்தித்து பேசுவதற்காகவே அங்கு சென்றோம்'' என்று பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து, ''இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், தேநீர் விருந்தை புறக்கணித்த நிலையில், நீங்கள் பங்கேற்றது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினர். ''இண்டியா கூட்டணியில் தற்போது காங்கிரஸ் மட்டும்தான் இருக்கிறது. நாங்கள் இல்லை'' என்று கனிமொழி பதில் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kanimozhi MP explains about Lok Sabha Speakers participation in tea party


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?


செய்திகள்



Seithipunal
--> -->