14 மக்களவை, ஒரு மாநிலங்களவையா... பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி ஒன்றை அளித்தார். 

அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, 14 மக்களவைத் தொகுதி ஒரு மாநிலங்களவை வேண்டும் என நான் கேட்கவில்லை. ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் தெரிவித்த கருத்தையே நான் தெரிவித்தேன். 

யாருடனும் மறைமுகமாக பேச்சுவார்த்தையை தொடங்காமல் வெளிப்படையாக மட்டும் தான் இருப்போம். கூட்டணி தலைமை ஏற்றிருப்பவர்கள் தான் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்.

இதனால் கூட்டணி குறித்து இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளிலும் மாநிலங்களவை எம்.பி உள்ளனர். அதைக் கேட்கும் உரிமை தே.மு.தி.கவிற்கு உள்ளது என தெரிவித்துள்ளார். 

மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து தே.மு.தி.க இன்னும் முடிவெடுக்காமல் உள்ள நிலையில் அதிமுக-பாஜக இரு கட்சிகளும் தேமுதிகவை கூட்டணிக்கு இழுப்பதற்கு முயற்சி செய்கிறது. 

அதனால் எந்த கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்பது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Premalatha Vijayakanth speech


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->