'இது ஒரு முடிவல்ல; இது ஒரு விடுதலை'; மனைவிடம் விவாகரத்து பெற்ற சி.எஸ்.கே வீரர்..!
CSK player Rahul Chahar divorces wife
இந்திய சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர், தனது மனைவி இஷானி ஜோஹர் இருவரும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றுள்ளனர். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;
"நான் என்னைப்பற்றியோ, எனது மதிப்பு குறித்தோ அல்லது நான் விரும்பிய வாழ்க்கையைப் பற்றியோ முழுமையாகப் புரிந்துகொள்ளாத இளம் வயதிலேயே திருமண வாழ்க்கையில் இணைந்தேன். அதைத் தொடர்ந்து நான் எதிர்பார்க்காத பல பாடங்களைக் கற்றேன். கடந்த பதினைந்து மாதங்களாக நீதிமன்ற நீதிமன்ற அறைகளில் பொறுமையையும், மீண்டு வரும் குணத்தையும், உண்மையால் கிடைக்கும் வலிமையையும் அறிந்துகொண்டேன்.
இன்று, என் வாழ்வின் அந்த அத்தியாயம் முறைப்படி முடிவுக்கு வருகிறது. உரிய சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு, பெரும் விலைகொடுத்து இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இது என் வாழ்வின் இந்த நிலைக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்துள்ளதோடு எனக்கு ஒரு தெளிவையும் தந்துவிட்டது.
இந்த அத்தியாயத்தை நான் கோபத்துடனோ அல்லது வருத்தத்துடனோ முடிக்கவில்லை; ஒரு தெளிவோடு முடிக்கிறேன். சில உறவுகள் வாழ்நாள் முழுவதும் நீடிப்பதற்கல்ல; அவை நம்மை விழிப்படையச் செய்யவும், பாடம் கற்பிக்கவும், நம்மை மாற்றியமைக்கவுமே வருகின்றன.
அதிக அறிவோடும், சுய விழிப்புணர்வோடும், எனக்குத் தகுதியான வாழ்க்கையை அமைப்பேன் என்ற உறுதியோடும் நான் முன்னோக்கிச் செல்கிறேன். இது ஒரு முடிவல்ல; இது ஒரு விடுதலை. ஒரு புதிய தொடக்கம். இனி நான் உருவாக்கும் அனைத்தும் சுயமரியாதை, அமைதி மற்றும் சிறந்த தேர்வுகளின் அடிப்படையில் அமையும் என்ற உறுதிமொழி.

என்னிடம் கசப்பான உணர்வுகள் எதுவுமில்லை, கற்றுக்கொண்ட பாடங்களும், கண்ணியமும், மீண்டும் தொடங்குவதற்கான துணிச்சலும் மட்டுமே உள்ளன." எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் சாஹர், தீபக் சாஹரின் சகோதரன் ஆவார். சாஹர் தனது 22 வது வயதில்,நீண்ட காலமாகக் காதலித்து வந்த இஷானி ஜோஹரை கடந்த மார்ச் 09, 2022 அன்று கோவாவில் திருமணம் செய்து கொண்டார். இந்திய உள்ளூர் கிரிக்கெட் போட்டியான ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான், மும்பை, ஹைதராபாத் சி.எஸ்.கே. அணிகளுக்காக விளையாடியுள்ளார். வரவிருக்கும் 2026 ஐபிஎல் 2026 தொடரில் அவர் சென்னை சூப்பர் கிங் அணிக்காக விளையாடவுள்ளார்.
English Summary
CSK player Rahul Chahar divorces wife