நைஜீரியாவில் பயங்கரவாதிகள் கொடூரச் செயல்; கால்நடைகளுக்காக 33 பேர் சுட்டுக் கொலை..!
Terrorists kill 33 people in Nigeria over cattle
மேற்கு ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவில் கெப்பி மாநிலத்தின் உள்ள ஏழு கிராமங்களில் நுழைந்த பயங்கரவாதிகள், கால்நடைகளை திருடிச் செல்வதற்காக 33 பேரை சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில், பிவு என்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வரும் இந்த பகுதில், கடந்த புதன்கிழமை பக்கத்து மாநிலமான சோகோட்டோவில் இருந்து வந்த லகுராவா என்ற அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் ஒரே நேரத்தில் 07 கிராமங்களிலும் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதில் மொத்தம் 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மாமுனு என்ற கிராமத்தில் அதிகபட்சமாக 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன், இந்த சம்பவத்தில் அங்கு வீடுகள் மற்றும் கடைகளுக்கும் பயங்கரவாதிகள் தீ வைத்துள்ளனர். இது குறித்து முதற்கட்ட விசாரணையில், கால்நடைகளைத் திருடுவதற்காகவே குறித்த தீவிரவாதிகள் கிராமத்துக்குள் ஊடுருவியதாக தெரிய வந்துள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தையடுத்து, அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட கூடுதல் ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் லகுராவா அமைப்பினர் ஆகும். வடமேற்கு நைஜீரியாவில் சமீபகாலமாக உருவெடுத்துள்ள ஒரு புதிய ஆயுதக்குழுவாகும். ஆரம்ப கட்டத்தில், உள்ளூர் மக்களை கொள்ளையர்களிடம் இருந்து காப்பதாகக் கூறி வந்த்துள்ளனர். பின்னர் இவர்களே வன்முறையில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டு நைஜீரிய அரசு லகுராவாவை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Terrorists kill 33 people in Nigeria over cattle