எடப்பாடி பழனிசாமி எங்களை ஏமாற்றிவிட்டார் - பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு.!!
premalatha vijayakant says eps cheeting
சென்னையில் உள்ள திநகரில் தேமுதிக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:- "வாக்குறுதி கொடுத்துவிட்டு எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவிட்டார் என்பது உன்மைதான். வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று நம்பினோம்.
எடப்பாடி பழனிச்சாமி மாநிலங்களவை சீட் தருவதாக கூறி முதுகில் குத்திவிட்டார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் கூட்டணி குறித்த ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிட்டு கையெழுத்திடுவதில்லை.

அதேபோலதான் தேமுதிக உடன் கூட்டணி ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிடாமல் கையெழுத்திட்டதனால் தான் நாம் ஏமாந்துவிட்டோம். எடப்பாடி பழனிசாமியின் பிரசார கூட்டங்களுக்கு காசு கொடுத்து தான் ஆட்கள் அழைத்து வரப்படுகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாடு பயணம் வெற்றி பெற வாழ்த்துகள் என்று தெரிவித்தார்.
English Summary
premalatha vijayakant says eps cheeting