போக்சோ வழக்கு.. குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை விதித்த நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

தமிழகத்தில் சமீப காலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது.குறிப்பாக சொல்லப் போனால் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு ஆனது அளிக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் மாணவிகளை பாலியல் சீண்டலில் ஈடுபடுத்துவது போன்ற குற்ற செயல்களும் நடந்தேறி வருகிறது. 

இந்தநிலையில் கடந்த 2023-ம் ஆண்டு 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மாப்பிள்ளையூரணி பகுதியைச் சேர்ந்த சபரி மகன் இசக்கிமுத்துஎன்பவரை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில்  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பீரித்தா இன்று குற்றவாளி இசக்கிமுத்துக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும் மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் , குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் , விசாரணைக்கு உதவியாக இருந்த நீதிமன்ற தலைமை காவலர்  ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார். இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 23 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Poxo case The court sentenced the criminal to 20 years in prison


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->