ஜவுளி துறையில் ஏற்பட்ட மந்த நிலையால் வேலை இழந்த தொழிலாளர்கள்..! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 2 லட்சத்திற்கும் அதிகமான விசைத்தறிகள் மூலம் தினசரி ஒரு கோடி மீட்டருக்கும் அதிகமான துணிகள் உற்பத்தி ஆகின்றன. சமீப காலமாக ஜவுளி துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவால் காடா துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பலர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறுகையில் "ஜவுளி துறையில் ஏற்பட்டுள்ள மந்தநிலையால் குறைவான விசைத்தறிகளே தற்பொழுது இயங்கி வருகிறது. 

இந்த நிலையில்  பாவு நூல் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளதால் விசைத்தறி துணி உற்பத்தி மேலும் குறைக்க கூடும்.

இதன் காரணமாக பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து மாற்று தொழிலுக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பஞ்சு, நூல் விலை ஏற்றம், மின் கட்டண உயர்வு போன்றவற்றால் விசைத்தறி தொழில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து நிலையை சரி செய்ய வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Power loom Workers lost jobs due to recession in textile industry


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->