பொன்முடி சும்மா இல்லாம பாட்டிக்கு செலவு வச்சிட்டாரு! - துரைமுருகன்! - Seithipunal
Seithipunal


குடும்பத் தலைவிக்கான ரூ.1000 திட்டம் விரைவில் முதல்வரால் தொடங்கி வைக்கப்படும்!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நீர்வளத் துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு நீர்வளத் துறை அமைச்சர் துறைமுருகன் தலைமை தாங்கி நடத்தினார். சென்னை மண்டல நீர்வளத்துறை சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை உட்பட 13 மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நீர்வளத் துறை சார்பாக பல்வேறு பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றி அதிகாரிகளுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தினார் இந்த கூட்டம் நிறைவு பெற்ற பிறகு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

செய்தியாளர்கள் சந்திப்பில் குடும்பத் தலைவிகளுக்கான ஆயிரம் ரூபாய் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் விரைவில் குடும்பத் தலைவருக்கான ஆயிரம் ரூபாய் திட்டம் தொடங்கப்படும். அதனை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைப்பார் எனவும் தெரிவித்தார்.

மேலும் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் "ஆர்எஸ்எஸ் பேரணியால் தமிழகத்தில் சட்ட வழங்கு பிரச்சனை ஏற்படும் மக்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை உருவாகும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் உயர் நீதிமன்ற உத்தரையின்படி ஆர்எஸ்எஸ் பேரணி நடித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்று பதிலளித்தார்.

அமைச்சர் பொன்முடி பெண்களின் இலவச பேருந்து பற்றி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடியோ வைரல் ஆனதை பற்றி கேள்விக்கு பதில் அளித்த துரைமுருகன் "பொன்முடி வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கலாம். தேவையில்லாமல் அந்தப் பாட்டிக்கு செலவு வைத்து விட்டார்" என அவர் பாணியில் கிண்டலாக பதில் கூறியுனார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ponmudi spent money on grandmother Duraimurugan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->