பொங்கல் பண்டிகை: கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை!
Pongal Festival flowers price increase
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மளிகை சந்தையில் பூக்கள் 3 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்குவதற்காக தற்போது பொதுமக்கள் முன்வந்துள்ளனர். அதில் முக்கியமாக கருதப்படும் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
தற்போது மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் நேற்று வரை 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பூக்கள் அனைத்தும் தற்போது ரூ. 3000, 2000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

மல்லிகை பூ கிலோ 3000 ரூபாய்க்கும், பிச்சிப்பூ மற்றும் முல்லை ஆகிய பூக்கள் கிலோ 2000 ரூபாய்க்கும் மெட்ராஸ் மல்லிகை 2000 ரூபாய்க்கும், சம்மங்கி சம்மந்தியாகிய பூக்கள் 250 ரூபாய்க்கும், செண்டுமல்லி 100 ரூபாய்க்கும், அரளி 450 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று மல்லிகை பூ 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று கிலோ 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் நேற்று முல்லை மற்றும் பிச்சிப்பூ 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் நாளை ஒரு நாள் பொங்கல் பண்டிகை இருப்பதால் இன்னும் பூக்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Pongal Festival flowers price increase