பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை எதிரொலி: பல மடங்கு உயர்ந்த விமான டிக்கெட் கட்டணங்கள்!  - Seithipunal
Seithipunal


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் பொங்கல் விடுமுறையை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் சொந்த ஊர் திரும்ப திட்டமிட்டுள்ளனர். 

இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, கோவை செல்லக்கூடிய விமானங்களில் பல மடங்கு டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. 

சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்வதற்காக வழக்கமாக .ரூ3624 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ. 13639 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. 

அதுபோல் சென்னை-மதுரை வழக்கமாக ரூ.3,367 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ. 11762 வசூலிக்கப்படுகிறது. 

சென்னை-திருச்சி இடையே வழக்கமாக ரூ. 2264 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ. 11,369 வசூலிக்கப்படுகிறது. 

பல மடங்கு விமான கட்டணங்கள் உயர்ந்தாலும் பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காக பொருட்படுத்தாமல் பயணம் செய்கின்றனர். 

மேலும் விமான டிக்கெட் கிடைக்காமல் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் கூடுதல் விமான சேவை இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pongal festival flight ticket prices higher 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->