#தமிழகம் | 19 வயது ஓட்டுனரை கரம்பிடித்த 22 வயது கல்லூரி மாணவி! காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்!  - Seithipunal
Seithipunal


பொள்ளாச்சி அருகே 19 வயதே ஆன இளைஞரை பொறியியல் படிக்கும் 22 வயது கல்லூரி மாணவி ஒருவர் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த தென் செங்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர், டிராக்டர் ஓட்டுநராக பனி செய்து வருகிறார்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 22 வயது பொறியியல் கல்லூரி மாணவி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

காதலர்கள் இருவரும் செல்போனில் பேசியும், நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் மாணவியின் பெற்றொருக்கு தெரியவந்தது. 

3 வயது குறைந்த இளைஞரை தங்களது மக்கள் காதலிப்பதை பெற்றோர்கள் கடுமையாக எதிர்த்தனர். மேலும், இந்த முறையற்ற காதலை கைவிடுமாறு அறிவுரை மகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 4-ந்தேதி விட்டைவிட்டு வெளியேறிய மாணவியும், அந்த இளைஞரும் கோவிலில் வைத்து மாலைமாற்றி திருமணம் செய்துகொண்டனர். 

மேலும், தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு கோட்டூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இதனை அடுத்து காதலர்களின் பெற்றோர்களையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி  வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pollachi lovers marriage issue kovai


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->