நாமக்கல்லில் தேசிய கீதத்திற்கு அவமரியாதை அளித்த துணை தலைமை காவலர் இடைநீக்கம்.!  - Seithipunal
Seithipunal


கடந்த 28ம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். 

விழாவின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது, விழாவில் கலந்துகொண்ட அனைவரும் எழுந்து நின்று மரியாதையை செலுத்தினர். ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாமக்கல்லை சேர்ந்த துணை தலைமை காவலர் சிவபிரகாசம் தேசிய கீதத்தை மதிக்காமல் நாற்காலியில் அமர்ந்து செல்போனில் பேசியபடி இருந்தார்.

அவர் பொறுமையாக போனில் பேசி முடித்துவிட்டு பின்னர் எழுந்து நின்றார். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதையடுத்து, துணை தலைமை காவலர்தேசிய கீதத்தை மதிக்கவில்லை என்று புகார் எழுந்தது. அந்த புகாரைத் தொடர்ந்து, துணை தலைமை காவலர் சிவபிரகாசத்தை இடைநீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி அதிரடியாக உத்தரவிட்டார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police sub inspector suspend for not respect to national anthem in namakkal


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->