மாமல்லபுரத்திற்கு பொதுமக்கள் செல்ல தடை - போலீசார் அதிரடி.! - Seithipunal
Seithipunal


சர்வதேச சுற்றுலாத்தலங்களில் ஒன்றான மாமல்லபுரத்துக்கு ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அந்த வகையில், இன்று நள்ளிரவு புத்தாண்டு துவங்கியதால், சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் இருக்கும் என்று கருதிய போலீசார் பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். 

அதன் ஒரு பகுதியாக புத்தாண்டை கொண்டாட கடற்கரைக்கு வரும் பொது மக்களை திருப்பி அனுப்பும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் புத்தாண்டை கொண்டாட பிற இடங்களில் இருந்து மாமல்லபுரத்திற்கு வரும் வாகனங்கள் ஹோட்டல்களின் முறையான அனுமதி சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. 

மாமல்லபுரம் கடற்கரை பகுதிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அங்கும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் புத்தாண்டை கொண்டாட மாமல்லபுரத்திற்கு சென்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police ban peoples dont go to mamallapuram


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->