கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் திடீர் திருப்பம்! யார் அந்த ஐந்து பேர்? - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் நேற்று முன்தினம் அதிகாலை 4.15 மணி அளவில் மாருதி கார் வெடித்ததில் ஜமேஷா முபின் என்பவர் பலியானது போலீசார் விசாரணை தெரியவந்தது. ஜமேசா முபின் ஒரு பொறியியல் பட்டதாரி என  தெரியவந்து. அவர் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் ரசாயன பொருள் மற்றும் பொட்டாசியம் சல்பரை போலீசார் கண்டுபிடித்தனர்.

இந்த நிலையில் ஜமேசா மூபின் வீட்டு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் சனிக்கிழமை இரவு 11:25 மணிக்கு மர்ம பொருள்களை ஜமேசா மூபின் உட்பட ஐந்து பேர் கொண்ட கும்பல் எடுத்துச் செல்லும் காட்சி தெளிவாக பதிவாகி இருந்தது. இந்த நிலையில் ஜமேசா மூபின் உடன் வந்த மற்ற நான்கு நபர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். 

இந்த நிலையில் கோவை மாநகர காவல் துறையினர் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை கைது செய்துள்ளனர். இதில் உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), மற்றும் ஜி.எம் நகரைச் சேர்ந்த முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27) மற்றும் முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோரை நேற்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாநகர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள் தான் கண்காணிப்பு கேமராவில் காணப்பட்ட நபர்களா என்பது குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. எனினும் இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police arrested five people in Coimbatore car blast incident


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->