கள்ளகாதலுக்கு இடைஞ்சலாக இருந்த கணவனை கொலை செய்த மனைவி...!! - Seithipunal
Seithipunal


கள்ளகாதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், குட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (45). மது பழக்கத்துக்கு அடிமையான இவர் கடந்த 18ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

 தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து அவரது மனைவி அளித்த புகாரில் மாரியப்பன் மது குடிக்க பணம் கேட்டததாக தெரிவித்தார்.

அதனால், அவர் வேறு யாரிடமோ பணம் வாங்கி குடித்து விட்டு மது போதையில் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார். ஆனால், பிரேதபரிசோதனை அறிக்கையில் மாரியப்பன் கூர்மையான ஆயுத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால், சந்தேகமடைந்த காவல்துறை மாரியப்பனின் மனைவி குட்டமாளிடம் விசாரணை மேற்கொண்டனர்.  அப்போது அவர் முன்னுக்குன் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் அவரிடம் கிடுக்குபிடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. மாரியப்பன் மதுவுக்கு அடிமையானதால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குட்டமாளுக்கு சிவசங்கர் என்பவருடன் கள்ளகாதல் ஏற்பட்டுள்ளது.

இதனால், இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இது மாரியப்பனுக்கு தெரியவரவே குட்டமாளை கண்டித்துள்ளார். கணவன் உயிருடன் இருந்தால் தங்கள் உல்லாசத்திற்கு தடையாக இருப்பார் என எண்ணிய குட்டமாள் அவரை கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதனால், கள்ளகாதலனுடன்  சேர்த்து மாரியப்பனை கொலை செய்து மதுபான கடை அருகே போட்டுள்ளார். இதனை அடுத்து அவர் மதுபோதையில் அவர் இறந்து விட்டதாக நாடகமாடியுள்ளார்.

இந்த வாக்குமூலத்தை அடுத்து அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police arrasted wife who killed her husband Near krishnagiri


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal