1 ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை., 17 வயது சிறுவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்..!! - Seithipunal
Seithipunal


1 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 17  வயது சிறுவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கோட்ராலப்பள்ளியில் 1 வகுப்பு சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். சிறுமி வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருக்கும் போது அந்த பகுதியில் உள்ள 17  வயது சிறுவனும் விளையாடியுள்ளான்.

அப்போது, அந்த சிறுமிக்கு மிட்டாய் வாங்கி தருவதாக அழைத்து சென்று அந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுப்படுள்ளான். இதனை கண்ட மூதாட்டி ஒருவர் அந்த சிறுமியின் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால், பயந்து அந்த சிறுவன் தலைமறைவாகியுள்ளான்.

இதனை அடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை விசாரித்து காவல்துறையினர் அந்த சிறுவனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police are searching for a boy who sexually harassed a 1st grade girl near krishnagiri


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal