CSK-விற்காக 02 வது சதம்; டி20-இல் 08-வது சதம் அடித்துள்ள சஞ்சு சாம்சன்..! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 19-வது சீனாவில் 33 வது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.  இதில், 05 முறை கோப்பை வென்ற அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. 

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் நிதானமாகவே தொடங்கினர்.

இதில் 03 பவுண்டரிகள் 01 சிக்சர் என அட்டகாசமாக தொடங்கிய கேப்டன் ருதுராஜ் 22 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்துவந்த சர்பராஸ் கான் அடுத்தடுத்து 03 பவுண்டரிகள் அடித்தார். அதன்படி, 06 ஓவரில் (பவர் பிளே) 73 ரன்கள் குவித்தது. 

அடுத்து, சர்பராஸ் கான் 14 ரன்னில் அவுட்டாக, அடுத்துவந்த ஷிவம் துபேவும் 05 ரன்னுக்கு வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். 02 விக்கெட்டுகள் தொடர்ச்சி விழுந்து அதிர்ச்சி கொடுத்தது.பின்னர் பொறுமையாக ஆடிய சஞ்சு சாம்சனுடன் பிரேவிஸ் ஜோடி சேர்ந்தார்.

இருப்பினும், 02 சிக்சர்களை அடித்து 21 ரன்களில் பிரேவிஸ் விரைவாகவே வெளியேறினார். பின்னர் சஞ்சு சாம்சன், கடைசிவரை ஆட்டமிழக்காமல் 54 பந்தில் 10 பவுண்டரிகள் 06 சிக்சர்கள் என பறக்கவிட்டு சதமடித்து அசத்தினார். சஞ்சு சாம்சனின் 101 ரன்கள் அபாரமான ஆட்டத்தால் 20 ஓவரில் 207 ரன்கள் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

தற்போது இரண்டாவது இன்னிங்க்சில் களமிறங்கியுள்ள மும்பை அணி, தற்போது 03 விக்கெட்டுகள்இழப்பிற்கு 30 ரன்கள் எடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sanju Samson has scored his 2nd century for CSK and his 8th century in T20s


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->