ஒருதலைக்காதலால் விபரீதம்; திருமணமான பெண்ணின் மகனை கழுத்தை அறுத்து கொன்ற சலவைக்கடைக்காரன்..! - Seithipunal
Seithipunal


மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆஷா. இவரது கணவர் நாசிக்கில் கூலி வேலை செய்து வந்த நிலையில், ஆஷா உள்ளூரில் வீட்டு வேலை செய்து வந்தார். இந்நிலையில், ஆஷாவைக் கடந்த சில ஆண்டுகளாக அதே ஊரைச் சேர்ந்த 45 வயதான மதுரா ராஜக் என்பவர் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார்.  மதுரா அப்பகுதியில் சலவைக் கடை வைத்து நடத்தி வந்த நிலையில், திருமணம் செய்து கொள்ளும்படி பலமுறை ஆஷாவிடம்  தொடர்ந்து வற்புறுத்தியிருக்கிறார்.

ஆஷா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். சம்பவத்தன்று ஆஷாவிடம் மீண்டும் மதுரா வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆஷா மதுராவை சத்தம் போட்டு விரட்டியிருக்கிறார். இதனால் கோபமடைந்த மதுரா இதற்கு தக்கவிலை கொடுக்க வேண்டி வரும் என்று கொலை மிரட்டி விடுத்துள்ளார்.

பின்னர். மதுரா குறித்து தான் வேலை பார்த்த வீட்டு உரிமையாளரிடம் ஆஷா புகார்  கூறிய நிலையில், அவர் நேராக மதுராவின் சலவைக் கடைக்குச் சென்று பலர் முன்னிலையில் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது, திருமணமான ஆஷாவை தொல்லை செய்வதை கைவிடுமாறும், தொடர்ந்து இவ்வாறு செய்தால் காவல்நிலையத்தில் புகார் அளித்து விடுவோம் என்றும் கூறிவிட்டு வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மதுராஆஷாவை பழி வாங்க வேண்டும் என திட்டம் தீட்டியுள்ளார். சம்பவத்தன்று ஆஷாவின் வீட்டிற்கு அரிவாளுடன் சென்ற மதுரா, அங்கு ஆஷாவின் 11 வயது மகன் சிவராஜ் மட்டுமே வீட்டில் தனியாக இருந்துள்ளதை பார்த்துள்ளார். அப்போது ஆஷாவின் மேல் இருந்த அத்தனை கோபமும் சிறுவன் மீது திரும்பியுள்ளது.

தான் வைத்திருந்த அரிவாளால் சிறுவனின் கழுத்தை அறுத்து கொலை செய்த மதுரா, அங்கிருந்த நீல கலர் டிரம்மில் சிறுவனை திணித்து, அதன் மீது துணியைப் போட்டு மூடி வைத்துவிட்டு சென்றுள்ளார். வெளியில் சென்று இருந்த ஆஷாவின் மகள் சிவராஜின் சகோதரி சஜல் பிற்பகலில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு பூட்டி இருந்துள்ளது.

ஜன்னல் வழியாக உள்ளே பார்த்துள்ளார். அங்கு மின் விசிறியும், விளக்கும் எரிந்து கொண்டிருந்தது. சிவராஜையும் காணவில்லை. அதே நேரம் அங்கிருந்த டிரம் மீது ரத்தக்கரை படிந்த அரிவாள் இருந்துள்ளது. அதைப் பார்த்து மிரண்டு போன சஜல் உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

விரைந்து வந்த போலீசார் கதவைத் திறந்து உள்ளே தேடிப் பார்த்தபோது டிரம்மில் சிறுவன் சிவராஜின் உடல் இருந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். தலைமறைவான மதுராவைப் பிடிக்க 03 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கிய நிலையில், அவரது போன் ஆப் செய்யப்பட்டு இருந்த போதும், போலீசார் அவரை தேடிக் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In Uttar Pradesh a laundryman slits the throat of a married womans son out of unrequited love


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->