நடத்தையில் சந்தேகம்: காதல் மனைவியை கொலை செய்து கணவர்.! போலீசார் வலைவீச்சு
Police are looking for the husband who killed his wife in Thoothukudi
தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவான கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் திருமாஞ்சி நகர் பகுதியை சேர்ந்த ஜான்ராஜ் என்பவரது மகன் கூலித்தொழிலாளி இம்மானுவேல் அப்துல்லா (32). இவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கன்னித்தாய் (30) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் கணவன்-மனைவி இடையே நேற்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த இம்மானுவேல் மனைவியை அடித்து கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் இம்மானுவேல் சரியாக வேலைக்கு செல்லாமல், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததும், நேற்று ஏற்பட்ட தகராறு ஆத்திரமடைந்து மனைவியை கொலை செய்ததும் தெரியவந்தது. இந்நிலையில் போலீசார் தப்பி ஓடிய இம்மானுவேலை பிடிக்க தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
Police are looking for the husband who killed his wife in Thoothukudi