விம்பிள்டன் டென்னிஸ் தொடர்: முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய போலந்தின் இகா ஸ்வியாடெக்..!
Poland Iga Swiatek advances to Wimbledon final for first time
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் போட்டிகள் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர். இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 02-வது அரையிறுதி சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஸ்வியாடெக் 6-2, 6-0 என்ற செட் கணக்கில் வென்று முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸவியாடெக், அமெரிக்காவின் அனிசிமோவாவை சந்திக்கவுள்ளார்.
English Summary
Poland Iga Swiatek advances to Wimbledon final for first time