தமிழக மீனவர்களின் படகை மோதிக் கவிழ்த்த சிங்களக் கடற்படை: டாக்டர் இராமதாஸ் கொந்தளிப்பு..! - Seithipunal
Seithipunal


தமிழக மீனவர்களின் படகை மோதிக் கவிழ்த்த சிங்களக் கடற்படை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையை சார்ந்த மீனவர்கள் வங்கக்கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த நிலையில், அங்கு வந்த சிங்கள கடற்படை அட்டகாசம் செய்து, தமிழக மீனவர்களின் படகில் மோதி சேதப்படுத்தி அதனை மூழ்கடித்துள்ளது. படகில் இருந்த 3 மீனவர்கள் நீரில் தத்தளிக்க, ஒருவர் மாயமாகியுள்ளார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் பதிவு செய்துள்ள ட்விட்டர் பதிவில், "வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மீனவர்களின் படகை  சிங்களக் கடற்படை கப்பல் மீதி கவிழ்த்துள்ளது. அதில் மூன்று மீனவர்கள் கடலில் மூழ்கி விட்டனர்; அவர்களில் ஒருவர் மாயமாகி விட்டார்.

6 மதற்கு முன் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுதலை.! விரைவில் தாயகம்  திரும்புவார்கள்.!! - Seithipunal

கோப்புப்படம் : மீன்பிடித்தல்.

சிங்களப் படையினரின் இந்தத் தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கது! சிங்களப் படைத் தாக்குதலில் கடலில் மூழ்கி மாயமான மீனவர் ராஜ்கிரணை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிதியுதவியும், சேதமடைந்த படகுக்கு இழப்பீடும்  வழங்க அரசு முன்வர வேண்டும்! தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல், படகு கவிழ்ப்பு என சிங்களக் கடற்படையினரின் தொடரும் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.  சிங்களக் கடற்படையினர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Ramadoss Request to TN Govt about Save Fisherman SriLanka Navy Atrocity 1 Man Missing


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->