எது நடந்து விடக் கூடாது என்று மக்கள் அஞ்சினார்களோ.., மருத்துவர் இராமதாஸ் கண்டனம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள ஜெ.ஜெ நகர் அம்மா உணவகம் திமுகவினரால் இன்று காலை சூறையாடப்பட்டது. இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையை பதிவு செய்த நிலையில், திமுகவினரின் அராஜக போக்கை கண்டித்து பல்வேறு குரல்கள் பதிவு செய்யப்பட்டது. 

ஜெ.ஜெ நகர் பகுதி உறுப்பினர்களான நவ சுந்தர், சுரேந்திரர் ஆகியோர் திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இருவரின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், " ஏழை எளிய மக்களின் பசியை போக்கிய அம்மா உணவகம் இன்று சில சமூக விரோதிகளால் சேதப் படுத்தப்பட்டது மிகுந்த கண்டனத்திற்குரியது. மழை வெள்ள காலம், கொரோனா கால ஊரடங்கின் போதும் அனைத்து மக்களுக்கும் உணவளித்த அம்மா உணவகத்தை சூரையாடிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன் " என்று தெரிவித்துள்ளார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் பதிவு செய்துள்ள ட்விட்டில், "  சென்னை முகப்பேரில் உள்ள அம்மா உணவகத்தின் பெயர்ப்பலகை, அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படம்  ஆகியவற்றை  திமுகவினர் சூறையாடியிருப்பது கண்டிக்கத்தக்கது.  அதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து ஆள்பவர்களின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப கொள்கை மாற்றங்கள் செய்யப்படுவது இயற்கையே. ஆனால், எது நடந்து விடக் கூடாது என்று மக்கள் அஞ்சினார்களோ அத்தகைய செயல்களில் திமுகவினர் ஈடுபடுவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Ramadoss Amma Unavagam Demolish Condemn 4 May 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal