மரு. அன்புமணி போட்ட ட்விட்.. சில நிமிடங்களில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் பதிவு செய்துள்ள ட்விட்டில், " காவலர், சிறைக்காவலர் உள்ளிட்ட பணிகளுக்கான உடற்திறன் தேர்வுகள் வரும் 21-ஆன் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறுவதாக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 60,000 பேர் இந்த தேர்வுகளில் கலந்து கொள்கின்றனர்.

கயிறு ஏறுதல் போட்டி, உயரம் மற்றும் மார்பளவை அளக்கும் போது கொரோனா  நோய் பரவுவதற்கான ஆபத்து அதிகம் உள்ளது. உடற்திறன் போட்டிகளின் போது முகக்கவசம் அணிவதோ, பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பதோ சாத்தியமற்றது.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், உடற்திறன் தேர்வுகள் நோய்ப்பரவலை மேலும் அதிகரிக்கக் கூடும். இதைக் கருத்தில் கொண்டு சீருடைப் பணியாளர் தேர்வாணைய உடற்திறன் தேர்வுகளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்க வேண்டும் " என்று தெரிவித்து இருந்தார்.

பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ட்விட் செய்த சில நிமிடங்களுக்கு உள்ளாகவே, தமிழகத்தில் ஏப்ரல் 21 ஆம் தேதி நடைபெற இருந்த சீருடை பணியாளர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் உடற்தகுதி தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நிர்வாக காரணத்திற்காக சீருடை பணியாளர்கள் தேர்வு தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss Request to Post Pended TNUSRB Exam Order Issued 17 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal