#Breaking: முதல்வர் சந்திப்புக்கு பின், மரு. அன்புமணி இராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பு..! - Seithipunal
Seithipunal


வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு வழங்கியதற்கு தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. இன்று தமிழக சட்டப்பேரவையில் வன்னியர்களுக்கு 10.5 தனி இட ஓதுக்கீடு வழங்கியுள்ளனர். இதற்காக தமிழக முதல்வர் மாண்புமிகு திரு.எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர் செல்வம், சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். 

தமிழகத்தில் பெரும்பான்மை சமுதாயக இருக்கும் வன்னியர் சமுதாயம், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பின்தங்கி இருக்கிறார்கள். இவர்களுக்கு கல்வி மற்றும்வி வேலைவாய்ப்பில் வாய்ப்புகள் கொடுத்தால் தான் முன்னேறுவார்கள் என்ற அடிப்படையில், கடந்த 40 வருடமாக மருத்துவர் இராமதாஸ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. 

இதனால் மருத்துவர் இராமதாஸ் பலமுறை சிறைவாசம் சென்றுள்ளார். கடந்த 1987 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் நடைபெற்ற போராட்டத்தில் 21 தியாகிகள் இன்னுயிர் நீத்து, 108 சமுதாயங்கள் சேர்ந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு உருவாக்கப்பட்டது. 

இந்நிலையில், தற்போதுள்ள சூழ்நிலையில் வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் 3 முதல் 4 விழுக்காடு பலன்கள் மட்டுமே கிடைத்தது. இதனால் வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று மருத்துவர் இராமதாஸ் தலைமையில் பலகட்ட பேச்சுவார்த்தை, பல கடிதங்கள், பல கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவர் இராமதாஸ் தலைமையில் தலைவர் ஜி.கே மணி, ஏ.கே. மூர்த்தி, வழக்கறிஞர் கே.பாலு தலைமையில் பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. 

இன்று தமிழக சட்டப்பேரவையில் வன்னியர்களுக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது விரைவில் சட்டம் ஆக்கப்படும். மருத்துவர் இராமதாஸ் இல்லையென்றால் இன்று இது சாத்தியம் கிடையாது. வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு ஜாதிக்கான பிரச்சனை கிடையாது. தமிழகத்தின் முன்னேற்ற பிரச்சனை. வன்னியர்கள் முன்னேற்றம் இல்லாமல் இருப்பதால் தான், தமிழகம் வளர்ச்சியடையாமல் இருக்கிறது. 

வன்னியர்களுக்கான போராட்டத்தில் கலந்துகொண்ட பல தலைவர்களுக்கும் நன்றிகள், எங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஆதரவு தெரிவித்த கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் " என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Anbumani Ramadoss Pressmeet about victory and thanks to Vanniyar Agitation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->