பாமக மா.செ தேவமணி படுகொலையில் மிகப்பெரிய சதிவலை..! கூலிப்படை வேரறுக்கப்பட வேண்டும் - அன்புமணி ஆவேசம்.!!
PMK Anbumani Ramadoss Highly Condemn PMK Karaikal Devamani Murder Issue
பா.ம.க. மாவட்ட செயலாளர் தேவமணி படுகொலையில் உண்மை குற்றவாளிகளை தப்பவிடக் கூடாது, கூலிப்படை கும்பல் வேரறுக்கப்பட வேண்டும் என அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பதிவு செய்துள்ள ட்விட்டர் பதிவில், "புதுவை காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் தேவமணி படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. மிகச்சிறந்த தொண்டரை இழந்த சோகத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவரது குடும்பத்திற்கு இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

மனித உயிர்களைப் பறிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிலும் கூலிப்படைக் கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டியது. தேவமணி கொலை வழக்கில் குற்றவாளிகள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூலிப்படைகளை முற்றிலுமாக வேரறுக்க வேண்டும்!

தேவமணி படுகொலை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இந்தக் கொலையில் வெறும் கருவிகள் தான். தேவமணி படுகொலையின் பின்னணியில் மிகப்பெரிய சதிவலை உள்ளது. காரைக்கால் பகுதியைச் சேர்ந்த பெரிய மனிதர்களுக்கு இதில் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது!

தேவமணி கொலை வழக்கை தவறாக நடத்தி உண்மைக் குற்றவாளிகளை காவல்துறை தப்பிக்கவிடக் கூடாது. கொலையாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். தவறினால் பா.ம.க. சட்டப்படியான நடவடிக்கைகளையும், கடுமையான போராட்டங்களையும் முன்னெடுக்கும்!" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
PMK Anbumani Ramadoss Highly Condemn PMK Karaikal Devamani Murder Issue