பிரதமர் தமிழகம் வருகை.! பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த அதிகாரிகள்.! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி வருகின்ற மே 26 தேதி ரூ.12,413 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக சென்னை வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

சென்னையில் மே 26 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கவிருக்கும் விழாவில் கலந்து கொள்ள அன்று மாலை தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து மாலை 5.10 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்திற்கு வருகிறார்.

பின்பு அங்கிருந்து 5.15 மணிக்கு விமானப்படை விமானம் மூலம் அடையாறு சென்று, அங்கிருந்து கார் மூலம் விழா நடைபெறும் அரங்கத்திற்கு செல்கிறார். 

இதனைத் தொடர்ந்து விழா முடிந்ததும் 7.30 மணிக்கு பழைய விமான நிலையம் செல்கிறார். அங்கு வழியனுப்பும் நிகழ்ச்சி முடிவடைந்ததும் 7.40 டெல்லிக்கு புறப்படுகிறார்.

பிரதமரின் இந்த பயண திட்டம் தொடர்பாக டெல்லியில் இருந்து பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். மேலும் பழைய விமான நிலையம், நேரு அரங்கம் மற்றும் அடையாறில் இருந்து நேரு அரங்கத்திற்கு செல்லும் சாலைகள் ஆகியவற்றில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக ஆய்வு செய்தனர்.

மேலும் சென்னையில் அவ்வப்போது சூறைக்காற்றுடன் மழை பெய்து ஹெலிகாப்டர் போக்குவரத்தை தவிர்க்கும் நிலை ஏற்பட்டால், சாலை வழியை தயார் நிலையில் வைக்க முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pm modi visit to tamilnadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->