அதிக நிறுவங்களில் மாணவர்களுக்கு பணிநியமனம் ..ஸ்ரீ இராஜ ராஜன் பொறியியல் கல்லூரி சாதனை!
Placement for students in various companies A achievement of Sri Raja Rajeswari Engineering College!
ஸ்ரீ இராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களில் சாதனை தேர்வாகி சாதனை புரிந்துள்ளனர்.
காரைக்குடி அருகே அமராவதிபுதூர் ஸ்ரீ இராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 2024-25 ஆம் ஆண்டு இறுதி ஆண்டு மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களில் தேர்வாகி உள்ளனர். அதற்கான பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.
மெக்கானிக்கல் துறை இறுதி ஆண்டு மாணவர் P.பிரதீஸ்வரன் வருடத்திற்கு 5 இலட்சம் சம்பளம் பெறும் வகையில் எவாக்வா வாட்டர் டெக்னாலஜிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் தேர்வாகியுள்ளார். இவருக்கு பி. எஃப் , எச்.ஆர்.ஏ, ஸ்பெஷல் அலோவன்ஸ் மற்றும் கிராச்சுவிட்டி தொகை ஆகியவற்றுடன் கூடிய ஆஃபர் லெட்டர் ஆனது வழங்கப்பட்டது. மேலும் வோர்க்கோஹால் சாப்ட்வேர் கம்பெனியில் வருடத்திற்கு 5 இலட்சம் சம்பளம் பெறும் வகையில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் துறை மற்றும் கம்ப்யூட்டர் சைன்ஸ் துறை மாணவர்கள் மொத்தம் 25 பேர் தேர்வாகியுள்ளனர்.
இந்த வருடம் பயின்ற அனைத்து மாணவர்களும் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் வருடத்திற்கு 3 இலட்சம் முதல் 5 இலட்சம் சம்பளத்தில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ இராஜ ராஜன் கல்வி குழுமத்தின் தலைவரும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தருமான முனைவர் சொ.சுப்பையா பணியில் தேர்வான மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியின் டீன் முனைவர் எம்.சிவகுமார், பேராசிரியர் கே.சி.பழனிவேலு, துணை முதல்வர்வி. மகாலிங்க சுரேஷ், வேலை வாய்ப்பு அலுவலர் ஆர்.ரேவதி , துறை தலைவர்கள் , ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
English Summary
Placement for students in various companies A achievement of Sri Raja Rajeswari Engineering College!