திருப்பூரில் பிரச்சாரம் செய்ய போகும் விஜய் - எங்குத் தெரியுமா? 
                                    
                                    
                                   place choose in tirupur for tvk election campaighn
 
                                 
                               
                                
                                      
                                            சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு த.வெ.க. தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். அதன் படி கடந்த 13-ந்தேதி திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய், அன்றைய தினம் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். 
ஆனால், வழியெங்கும் அதிகளவில் தொண்டர்கள் திரண்டதால், குறிப்பிட்ட நேரத்துக்குள் அனுமதி வழங்கப்பட்ட இடங்களுக்கு செல்ல முடியாததனால், திருச்சி, அரியலூரில் மட்டும் மக்கள் சந்திப்பை நடத்திவிட்டு, பெரம்பலூர் செல்லாமல், சென்னை திரும்பினார். 
இதையடுத்து விஜய் திருப்பூரில் அடுத்த மாதம் 5-ந்தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக, திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பாலமுருகன் தலைமையில் தவெக., நிர்வாகிகள் காவல் ஆணையரை சந்தித்து அனுமதி கோரி மனு அளித்தனர்.
மேலும், திருப்பூரில் பிரசாரம் செய்வதற்காக சின்னக்கரை, பாண்டியன் நகர், அவினாசி, பல்லடம் ஆகிய நான்கு இடங்களை த.வெ.க. நிர்வாகிகள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
போலீசார் சார்பில் பாண்டியன் நகரில் பிரசாரம் செய்ய அனுமதி வழங்குவதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் நேரில் வந்து பார்வையிட்டு அவர் கூறும் இடத்தில் விஜய் பிரசாரம் செய்ய போலீசாரிடம் அனுமதி கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
                                     
                                 
                   
                       English Summary
                       place choose in tirupur for tvk election campaighn