தமிழகத்தில் மீண்டும் பரபரப்பு.. இந்து முன்னணி ஆதரவாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.! - Seithipunal
Seithipunal


சிதம்பரம் இந்து முன்னணி ஆதவாளர் வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோவை பாஜக அலுவலகம், கடலூர், மதுரை, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பாஜக மற்றும் இந்து மத அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள் மீது குறி வைத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்து வருகிறது.

இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களால் தமிழகம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அதன் காரணமாக முக்கிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

மேலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விழித்திருந்தார். மேலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனங்கள் தெரிவிப்பதுடன் இதில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இந்து முன்னணி ஆதரவாளர் வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Petrol bomb hurled at Hindu front supporter's house


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->