நாய்க்குட்டியை தன் குழந்தை போல, மாரில் அணைத்து பாதுகாத்த தாய் குரங்கு.. பாதுகாப்பு கருதி மீட்ட பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி பேருந்து நிலையம் அருகே, கடந்த சில நாட்களாக குரங்கு ஒன்று நாய்க்குட்டியை தூக்கிக் கொண்டு சுற்றி திரிந்து உள்ளது. மேலும், தனக்கு கிடைக்கும் உணவுகளை நாய் குட்டிக்கும் கொடுத்து வளர்த்து வந்துள்ளது. 

அங்குமிங்கும் குரங்கு குட்டி போலவே, நாய் குட்டியை வைத்து தாவி வந்துள்ளது. இதனை கண்டு வியந்த பொதுமக்கள், குரங்கு சில நேரங்களில் மரத்தில் அல்லது பிற இடங்களில் தாவும்போது, நாய்க்குட்டி கீழே விழுந்து உயிர் இழப்பு ஏற்படலாம் என்ற அச்சத்தில், குரங்கிடம் இருந்து நாயை மீட்க முயற்சி செய்தனர். 

ஆனால், சுதாரிப்புடன் இருந்த குரங்கு நாய் குட்டியை விடாமல், தன் மார்பில் குரங்கு குட்டி போலவே அணைத்து சுற்றி வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று அந்த பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள், குரங்கிடம் இருந்து நாய்க்குட்டியை மீட்க முயற்சி செய்தனர். சுமார் ஒருமணிநேர போராட்டத்திற்கு பின்னர் குரங்கிடம் இருந்து நாய்க்குட்டியை அவர்கள் மீட்டுள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Perambalur Thittakudi Baby Dog Rescue Form Monkey Mother Love


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->