இணையத்தை கலக்கும் பெரம்பலூர் டைனோசர் சகாப்தங்கள்..! - Seithipunal
Seithipunal


டைனோசரின் முட்டைகள் கிடைத்தது தொடர்பான தகவல் பரவியதும், இதனை கிண்டல் செய்யும் பொருட்டு பல மீஸ்கள் இணையங்களில் தொடர் வைரலாகி வருகிறது. 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் கிராமத்தின், ஆனைவாரி ஓடை பகுதியில் வெங்கட்டான் குளம் இருக்கிறது. இந்த குளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வண்டல் மண் எடுத்த போது, கடல்வாழ் உயிரினங்களின் தொல்லியல் படிவங்கள் கிடைத்தது. 

பல உருண்டை வடிவிலான தொல்லியல் படிவங்கள் கிடைத்த நிலையில், இதனை டைனோசர் முட்டை என்று மக்கள் சமூக வலைத்தளங்களில் தகவலை தெரியப்படுத்தினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், முட்டை வடிவிலான பொருட்களை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பினர்.

இந்நிலையில், பெரம்பலூர் பகுதியில் டைனோசர் முட்டை கிடைத்ததாக தகவல் ஏற்கனவே வைரலாகி இருந்த நிலையில், இது குறித்த பல மீம்ஸ்கள் பெரும் வைரலாகி வருகிறது. இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், இது டைனோசர் முட்டை இல்லை என்றும், சிறுபொருளை சுற்றி தாதுப்பொருட்கள் படிந்து முட்டை போல காட்சியளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறாக பல மீம்ஸ்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Perambalur Dinosaur mems trending on Social Media


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->