மத்திய அரசின் சகிப்புத்தன்மையற்ற செயல் - முதலமைச்சர் முக ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


பாராளுமன்ற மக்களவையில் அத்துமீறி இருவர் வண்ண புகை குண்டுகளை வீசிய சம்பவம் நாடு முழுவதும் அதிரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

நாடாளுமன்றத்தின் இந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, இன்று காலை மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

2 மணிக்குப் பிறகு அவை மீண்டும் கூடிய போது தமிழக எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டதாக திமுக எம்பி கனிமொழி மற்றும் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உள்பட 14 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில்,  "எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 15 பேரின் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ஜனநாயக விரோதமானது. பா.ஜ.க. அரசின் சகிப்புத்தன்மையற்ற செயலைக் கண்டிக்கிறேன்.

பாராளுமன்றம் விவாதம் நடத்தும் அவையாக இருக்கவேண்டும். எம்.பி.க்களின் கருத்துரிமையைப் பறிப்பது புதிய பாராளுமன்ற விதிமுறையா? பாராளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி எழுப்பிய எம்பிக்களை தண்டிப்பதா?

எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் வகையில் பாராளுமன்றம் செயல்படக் கூடாது. எம்.பி.க்களின் சஸ்பெண்ட் நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்" என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parliament Parliament Attack DMK Kanimozhi MPs Suspended MK Stalin 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->