ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


நடிகர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் உள்ளிட்ட பல திறமைகளைக் கொண்டவர் தனுஷ். தற்போது இவர் தனது 50 வது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இதற்கு 'ராயன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தாயரிக்கும் இப்படத்துக்கு ஏர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன்,பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம் , சுதீப் கிசன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்தப்படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. 

இந்த நிலையில் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 1 ஆம் தேதி பிரமாண்டமாக நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த விழாவில் இதுவரை தனுஷை வைத்து படம் இயக்கிய இயக்குனர்களை அழைத்து கவுரவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராயன் படம் ஜூன் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

raayan movie audio launch update


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->