முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு நாளை 03-வது முறையாக விசாரணை..!
Chief Minister Vijay and Sangeethas divorce case to be heard for the third time tomorrow
முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவகாரத்து வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் 03வது முறையாக நாளை (ஜூன் 15ஆம் தேதி) விசாரணைக்கு வரவுள்ளது.
கடந்த 27 ஆண்டுகளாக திருமண வாழ்வில் இணைந்து வாழ்ந்த விஜய்- சங்கீதா தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி, சங்கீதா தரப்பில் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அதன் பின்னர் இந்த வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதில் சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 12 பக்க மனுவில், ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வசிப்பதற்கான உரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் முந்தைய விசாரணையின்போது, இரு தரப்பினருக்கும் நீதிமன்றம் சார்பில் சம்மன் அனுப்பியது. அதன் பின்னர் ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இருவரும் ஆஜராகாத நிலையில், இரு தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதில், விஜய், சங்கீதா ஆகிய இருவரும் பொதுவெளியில் பிரபலமானவர்கள் என்பதால் அவர்கள் நேரில் ஆஜராவதில் உள்ள பாதுகாப்பு மற்றும் இதர சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, வீடியோ கான்பரன்ஸிங் மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், நாளை (ஜூன் 15ஆம் தேதி) முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவகாரத்து வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் 03-வது முறையாக விசாரணைக்கு வரவுள்ளது. விஜய் முதல்வராகுவதற்கு முன்பு இந்த விவாகரத்து வழக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாளைய இந்த வழக்கும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Chief Minister Vijay and Sangeethas divorce case to be heard for the third time tomorrow