நாயுடன் ஒப்பிட்டதாக வெடித்த சர்ச்சை; ''நான் கூறியதை தவறாக பரப்புகின்றனர்''; நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கம்..! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றத்தோடு, தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

இதில் பெரம்பூரைத் தக்கவைத்துக் கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியில் தனது பதவியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்தார்.
இந்த தொகுதியில் தவெக சார்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடலாம் என்று கடந்த சில நாட்களாக தகவல் பரவியது.

அதற்கு விளக்கம் கொடுத்த லாரன்ஸ், "நான் அரசியலுக்கு வருவதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்" என்று கூறி வீடியோ வெளியிட்டதோடு, அரசியலுக்கு வர தனது தாய் ஒப்புதல் கொடுத்துவிட்டாலும், மக்கள் அழைத்தால் தான் அரசியலுக்கு வருவேன் என்றும் கூறினார்.

இந்நிலையில் சென்னை உத்தண்டியில் உள்ள தனது இல்லத்தில் லாரன்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

''என் ரசிகர்கள் உங்களை அழைத்து என் தாய் அவர்களை மேடை ஏற்றி முக்கிய அறிவிப்பை விரைவில் தெரிவிக்கவுள்ளேன். தவெக தொண்டர்கள் தற்குறிகள் அல்ல. அவர்கள் தான் அக்கட்சியின் அம்புக்குறிகள்" என்று கூறியிருந்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, ராகவா லாரன்ஸ் ஒப்பீடு சர்ச்சையானது. அதாவது, "தவெக அரசிற்கு ஒரு சில கால அவகாசம் கொடுக்க வேண்டும். நாம் ஒரு மாற்றம் வேண்டும் என நினைத்தோம். அது நடந்தது. அதற்கு ஏற்றார் போல் ஒரு சில கால அவகாசம் கொடுக்க வேண்டும். ஒரு புதிய வீட்டிற்கு செல்லும் போது ஓனர் சாவி கொடுத்து உள்ளே போகும் போது தான் தெரியும் வீட்டில் என்னென்ன பிரச்சனை உள்ளது என்பது. 

எங்கே தண்ணீர் பிரச்சனை, எங்கே மற்ற பிரச்சனை உள்ளது என வீட்டிற்கு உள்ளே சென்றால் தான் தெரியும். வீட்டிற்கு அப்படி என்றால் நாம் நாட்டையே கொடுத்து உள்ளோம். அதே போல ஒரு ரோட்டில் புதிதாக ஒருவர் சென்றால் தெருநாய் கூட கத்தும். அப்படி கத்தும் தெரு நாய்க்கு பிஸ்கட் போட வேண்டும். ஒரு சில தெரு நாய் பிஸ்கட் சாப்பிடாது, பிரியாணி சாப்பிடும். அதற்கு பிடித்தது போல் சேர்த்து போட்டு அதை கத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

ஒரு நாய்க்கு இப்படி என்றால் நாம் நாட்டை கொடுத்து உள்ளோம். எனவே அதற்கான அவகாசம் கொடுப்போம். விஜய் மீதான பொறாமையில் எதிர்கட்சியில் உள்ளவர்கள் விமர்சனங்கள் தெரிவித்து வருகிறார்கள். கடுமையான விமர்சனங்களை முன் வைப்பதற்கு காரணம் பொறாமை தான் காரணம்" என்று அவர் அவர் ஒப்பீடு செய்து பேசியுள்ளமை பெரும் சர்ச்சையாகியுள்ளது.

இந்நிலையில் இதற்கு ராகவா லாரன்ஸ் ''மக்களை நாய்களுடன் ஒப்பிடவில்லை. நான் கூறியதை தவறாக பரப்புகின்றனர். எனது ரசிகர்களும், மக்களும் என் தாய்க்குச் சமமானவர்கள்'' விளக்கமளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Raghava Lawrence clarifies that his comparison to a dog is being misrepresented


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->