மகளிர் டி20 உலகக்கோப்பை 2026; தீப்தி சர்மாவின் சுழலில், மந்தனாவின் அபார ஆட்டத்தில், 64 ரன்கள் வித்தியாசத்தில் சுருண்டு வீழ்ந்த பாகிஸ்தான் மகளிரணி..! - Seithipunal
Seithipunal


ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் விறுவிறுப்பான 6-வது லீக் போட்டி இன்று நடைபெற்றது. பலரும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய மகளிர்- பாகிஸ்தான் மகளிர் அணிக்கிடையிலான இந்த போட்டியில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 06 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது.  இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா 06 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 1 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

ஆனாலும், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை மீட்டெடுத்தது. இதில், மந்தனா 44 பந்துகளில் 09 பவுண்டரிகள், 02 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

அதன் பின்னர் அணியின் ரன் எண்ணிக்கை சற்று குறைய, இறுதி கட்டத்தில் ரிச்சா கோஷ் வெறும் 17 பந்துகளில் 05 பவுண்டரிகள், 01 சிக்ஸருடன் 34 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை 170 ஆக உயர்த்தினார். பாகிஸ்தான் அணி சார்பில்,  சாடியா இக்பால் மற்றும் கேப்டன் பாத்திமா சனா தலா 02 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

171 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே தடுமாற்றமாக இருந்தது. தொடக்க வீராங்கனை முனீபா அலி மட்டுமே சற்று ஓரளவுக்கு போராடி 35 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார்.

மற்ற வீராங்கனைகளான குல் பெரோசா 12 ரன்கள், ஆயிஷா ஜாபர் 12 ரன்கள், அலியா ரியாஸ் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணியின் அபார பந்துவீச்சால் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 106 ரன்களுக்கு சகல விக்கெட்டுகளை இழந்தது.

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் தீப்தி சர்மாவின் சுழற்பந்துவீச்சு இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அவர் தனது 4 ஓவர்களில் வெறும் 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 05 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானை பந்தாடினார்.

அடுத்து ஸ்ரீ சரணி 04 ஓவர்களில் 21 ரன்கள் கொடுத்து 03 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீப்தி சர்மா Player of the Match ஆக தேர்வு செய்யப்பட்டார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian womens team defeated Pakistan by 64 runs in the Womens T20 World Cup match


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->