சீட் இல்லையேன்னு கவலை வேண்டாம்; இனி ஓடும் ரயிலிலும் சீட் கன்பார்ம் பண்ணிக்கலாம்; இந்திய ரயில்வேயின் புதிய நடைமுறை..! - Seithipunal
Seithipunal


இந்திய ரயில்வேயில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்த சூழலில் கடைசி நேரப் பயணிகளுக்குக் கன்பார்ம் டிக்கெட் கிடைப்பது பெரும் சவாலாக உள்ளது. இந்த நிலையை மாற்ற இந்திய ரயில்வே முடிவெடுத்துள்ளது.

அதன்படி, ரயில் புறப்பட்ட பிறகும் வழியில் ஏதேனும் சீட்டுகள் காலியாக இருந்தால், அதை ஓடும் ரயிலில் இருந்தபடியே பயணிகள் தங்களின் பெயருக்கு மாற்றிக் கொள்ளும் புதிய வசதியை ரயில்வே கொண்டு வரவுள்ளது.

இத்திட்டத்தின்படி, ஒரு குறிப்பிட்ட பயணி ரயிலில் ஏறவில்லை என்றாலோ அல்லது கடைசி நேரத்தில் தனது பயணத்தை ரத்து செய்திருந்தாலோ, அந்த விபரம் உடனடியாக ஆன்லைன் மூலமாக மற்ற பயணிகளுக்குத் தெரியப்படுத்தப்படும்.

இந்த டிஜிட்டல் மாற்றத்திற்கான முழுப் பொறுப்பும் இந்திய ரயில்வேயின் தகவல் தொழில்நுட்பப் பிரிவான 'கிரிஸ்' (CRIS - Center for Railway Information Systems) அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, தற்போது ரயில்களில் டிக்கெட் பரிசோதனை செய்யும் டிடிஇ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள 'ஹேண்ட் ஹெல்ட் டெர்மினல்' இயந்திரங்களின் மென்பொருள் இதற்கேற்ப மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த இயந்திரங்களில் புதிய 'கன்பார்ம் பர்த் புக்கிங்' அம்சம் சேர்க்கப்பட உள்ளது. இதனால், களத்தில் பணியாற்றும் டிடிஇ பணியாளர்களுக்கு இதற்கான சிறப்புப் பயிற்சிகளும் ரயில்வேயால் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த புதிய நடைமுறையில், ரயிலில் ஏதேனும் சீட்டுகள் காலியாக இருந்தால் அது ரயிலுக்குள் இருக்கும் டிடிஇ-க்கு மட்டுமே தெரியும். அவர் மூலமாகவே அந்த சீட்டுகள் மற்ற பயணிகளுக்கு ஒதுக்கப்பட்டு வந்தன. இதனால், சாதாரணப் பயணிகளுக்கு எந்தப் பெட்டியில், எந்த சீட் காலியாக உள்ளது என்ற விபரம் தெரியாமல் இருந்தது.

இந்நிலையில், ரயில்வேயின் புதிய மாற்றமாக புதிய தொழில்நுட்பத்தின்படி, டிடிஇ தனது பரிசோதனையின் போது யாரேனும் வரவில்லை என்றால், அந்த சீட்டைத் தனது இயந்திரத்தில் 'காலியாகவுள்ளது' எனப் பதிவு செய்வார். அவர் பதிவு செய்த அடுத்த நொடியே, அந்தத் தகவல் ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் மற்றும் ரயில்வேயின் முதன்மை புக்கிங் போர்ட்டலில் நேரலையாக (Live)க் காண்பிக்கப்படும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.

இதன் மூலம், வழியில் உள்ள ஏதேனும் ஒரு ஸ்டேஷனில் இருந்து ரயிலில் ஏறக் காத்திருக்கும் ஒரு பயணி, தனது மொபைல் மூலமாகவே அந்த காலி சீட்டைப் பார்த்து உடனடியாகக் கன்பார்ம் டிக்கெட்டாகப் பதிவு செய்து கொள்ள முடியும்.

இந்த புதிய வெளிப்படையான நடைமுறை பயணிகளுக்குப் பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது. அத்துடன், ஆர்.ஏ.சி போன்ற பழைய சலிப்பூட்டும் முறைகளை முழுமையாக ஒழிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian Railways new procedure to confirm seats even on a moving train


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->