சேலம் | ஆத்தூரில் 5 மணி நேரம் வெளுத்து வாங்கிய கன மழை! வெள்ளக்காடாக மாறிய வயல்வெளிகள்!
Salem heavy rain
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. குறிப்பாக ஆத்தூர், கரியகோவில், நத்த கரை, சங்ககிரி, மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.
அதிலும் குறிப்பாக ஆத்தூரில் நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 2 மணி வரை தொடர்ச்சியாக கன மழை பெய்ததால் சாலையோரங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் நீர் தேங்கியதால் எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளித்தது. இன்று காலையில் லேசான மழை பெய்தது.
சேலம் மாநகரில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை சுமார் 5 மணி நேரம் கன மழை நீட்டித்ததால் குளிர்ந்த காற்று வீசுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் அதிகப்படியாக ஆத்தூரில் 96.4 மில்லி மீட்டர், மழையும் நத்த கரை 31, கரிய கோவில் 26 மில்லி மீட்டர், சங்ககிரி 20 மில்லி மீட்டர், ஏற்காடு 4.4 , ஆனை வடிவில் 19 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.