வெளியானது சூர்யாவின் 44 ஆவது படத்தின் அப்டேட்.! - Seithipunal
Seithipunal


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த ஜிகர்தண்டா பாகம் 2 திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார்.

இந்தப் படம் சூர்யாவின் 44 ஆவது படம் ஆகும். இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகவுள்ளது. இந்தத் திரைப்படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு திருநாவுகரசு ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். இந்தப் படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. சூர்யா தற்பொழுது கங்குவா படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

surya 44 movie update


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->