இந்திய டி20 அணியின் புதிய கேப்டனான ஸ்ரேயஸ் ஐயர்; முன்னாள் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சி..! - Seithipunal
Seithipunal


இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு, முன்னாள் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மும்பை டி20 லீக் போட்டியின் டாஸ் நிகழ்வின் போது பேசிய சூர்யகுமார் யாதவ் கூறியதாவது;

''இந்திய டி20 அணியின் கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் பொறுப்பேற்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நாங்கள் இருவரும் மும்பையில்தான் ஒன்றாக கிரிக்கெட் விளையாடி வளர்ந்தோம். இந்தியாவின் கடைசி மூன்று டி20 கேப்டன்களும் மும்பையைச் சேர்ந்தவர்களாக இருப்பது பெருமையாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார். 

2028 ஒலிம்பிக் மற்றும் டி20 உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு, அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2023 டிசம்பருக்குப் பிறகு இந்திய டி20 அணியில் இடம் பெறாமல் இருந்த ஸ்ரேயஸ் ஐயர், தற்போது நேரடியாகக் கேப்டனாகியுள்ளார். உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் தராததால் அணியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஐபிஎல் 2024 கோப்பையை வென்று கொடுத்தார். தொடர்ந்து அடுத்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக அந்த அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார்.

அத்துடன், 165-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களைக் குவித்து தனது திறமையை மீண்டும் நிரூபித்தார். அதேப்போன்று இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தி அணியை பிளேஆப் வரை கொண்டு வந்தார். இதன் காரணமாகவே தற்போது அவருக்குக் கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.

டி20  இந்திய அணி

டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணைக் கேப்டன்), ரவி பிஷ்னோய், அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ், சஞ்சு சாம்சன், அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், சிவம் துபே, வருண் சக்கரவர்த்தி, பிரின்ஸ் யாதவ் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

uryakumar Yadav gets emotional about Shreyas Iyer the new captain of the Indian T20 team


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->