நீதிமன்றத்தில் பெற்ற மகள் கூறிய வார்த்தையால்., அதிர்ச்சியில் ஆடிப்போன பெற்றோர்.!  - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி அருகே துரைசாமி என்பவருக்கு நித்தியானந்தன் என்ற மகன் இருக்கின்றார். இவர் அதே பகுதியில் சதீஷ் என்பவர் செல்போன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது சதீஷின் உறவினர் மகள் காயத்ரிக்கும், நித்யானந்தனுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. 

கடந்த இரண்டாம் தேதி நித்யானந்தனும், காயத்ரியும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர். திருமணத்தை பதிவு செய்துகொண்ட நிலையில், காயத்ரியின் பெற்றோர் பெண்ணை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

பின்னர், சதீஷ் நித்யானந்தத்தை தொடர்பு கொண்டு உங்களை எதுவும் செய்ய மாட்டோம். காயத்ரிக்கும், அவரது பெற்றோருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சார்பதிவாளார் அலுவலகத்தில் எழுதிகொடுத்துவிட்டு செல்லுமாறு கூறியுள்ளார். 

இதனை உண்மை என்று நம்பி அவர்களும் வர அப்போது இடைமரித்து காயத்ரியை மட்டும் கடத்தி சென்றுள்ளனர். பின்னர், நித்யானந்தன் போலிசில் புகார் அளித்ததில் வழக்கு தொடர்பான விசாரணை ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக காய்த்ரியை அழைத்து சென்ற போது, பெற்றோருடன் வாழ விருப்பமில்லை என்று கூற அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர், நீதிபதி கணவருடன் காயத்ரியை அனுப்பிவைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Parents shocked with there daughter's word


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->