பார்சல் சேவை நிறுத்தம்..பொருட்கள் அனுப்ப முடியாமல் தவிக்கும் உறவினர்கள்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் பார்சல் சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால்  அமெரிக்காவுக்கு பொருட்கள் அனுப்ப முடியாமல் உறவினர்கள் திணறி வருகின்றனர்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல்இந்தியாவிற்கு பல்வேறு சிரமங்களை கொடுத்து வருகிறார். குறிப்பாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு செல்லும் பொருட்களுக்கு50 சதவீத வரி விதித்துள்ளார். இதனால்  இந்திய பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 100 அமெரிக்க டாலர்களுக்கு மேலான இந்திய பொருட்களுக்கு வருகிற 29-ந்தேதி முதல் அமெரிக்காவில் சுங்க வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் 29-ந்தேதி முதல் அனைத்து தபால் பொருட்களுக்கும் அதன் மதிப்புக்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் சுமார் 9 ஆயிரம் மதிப்புள்ள (100 டாலர்) பொருட்களுக்கு மட்டுமே வரி விலக்கு அளிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த புதிய வரி விதிப்பால் இந்தியா அதிர்ச்சி அடைந்துள்ளது.

அமெரிக்க விமானங்களில் இந்திய பார்சல்களை அனுமதிக்க கூடாது என்று அறிவிப்பில் தெளிவான விவரங்கள் இல்லாததால் நாடு முழுவதும் இன்று முதல் பார்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தபால் நிலையங்களில் அமெரிக்காவுக்கு பார்சல் புக்கிங் செய்வது நிறுத்தப்பட்டது.

இதனால் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய குடும்பங்களின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். சென்னையில் அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம், கடற்கரை தபால் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அலுவலங்களிலும் அமெரிக்காவுக்கு பார்சல் பதிவு செய்வது நிறுத்தப்பட்டது.

பார்சல் சேவை அமெரிக்காவுக்கு நிறுத்தப்பட்டதால் அமெரிக்காவில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்திய தபால் துறையிடமிருந்து அடுத்த கட்ட தகவல் வரும் வரை இந்த நடவடிக்கை தொடரும். இதனால் சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து அமெரிக்காவுக்கு பார்சல் அனுப்ப முடியாமல் உறவினர்கள் தவிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Parcel service suspension relatives struggling to send goods


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->