#பெரம்பலூர் : கோவில் நிலத்தை பட்டா போட்டு ஆக்கிரமித்த சர்வேயர்.! வெடித்த சர்ச்சை.!  - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டத்தில் சர்வேயராக பணிபுரிந்த நபர் கோவில் நிலத்தை தனது பெயருக்கு பட்டாவாக மாற்றிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் வட்டம், பரவாய் கிராமத்தில் அமைந்துள்ளது பெருமாள் கோவில். இந்த பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ஒரு இடத்தை பொதுமக்கள் பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தி வந்தார்கள்.

 

இத்தகைய நிலையில் அதே கிராமத்தில் சர்வேயராக மணி என்ற நபர் பணியாற்றி வந்த நிலையில் அவர் அந்த இடத்தை தன்னுடைய பெயர்க்கு பட்டா போட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளார். 

இதன் காரணமாக கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து அந்த இடத்தை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பரமா கிராமத்து பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு, அதன் பின்னர் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Paravai Village peoples protest in Perambalur collector Office


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->