விபத்துக்கு காரணமாக இருந்து பங்கஜ் சர்மா! பணியிடை நீக்கம் செய்து கைது செய்த காவலர்கள்...! - Seithipunal
Seithipunal


கடலூரில் செம்மங்குப்பம் பகுதி அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்து. இந்த விபத்தில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிந்தார்.இந்நிலையில் சிகிச்சைக்கு அழைத்துச்சென்றவர்களில் ஒரு மாணவியும் அநியாயமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.இதில் பலத்த காயமடைந்த 2 மாணவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இதில் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகினான்.

இதையடுத்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.மேலும், பணியில் அலட்சியமாக இருந்ததாகத் தெரிவித்து கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை பணியிடை நீக்கம் செய்து ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இந்நிலையில் பள்ளி வேன் மீது ரெயில் மோதுவதற்கு காரணமாக இருந்த ரெயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், பங்கஜ் சர்மாவிடம் ரெயில்வே காவலர்களும், உள்ளூர் காவலர்களும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதில் திடுக்கிடும் தகவலாக கேட் கீப்பர் மது அருந்தி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இது உண்மையா? என்று மேற்கட்ட விசாரணை  நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pankaj Sharma was cause accident policemen who suspended him and arrested him


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->