ராமநாதபுரத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வரும் மோடியின் சகோதரர்! முத்துராமலிங்க தேவரை வணங்கினார்! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரரான பங்கஜ் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு பயணம் மேற்கொள்வது வழக்கம். முக்கிய அரசியல் தலைவர்களையும் நடிகர்களையும் சந்தித்து பேசி வருகிறார். 

தற்பொழுது ராமநாதபுரம் மாவட்டம் அடுத்த முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூர் கிராமத்திற்குச் சென்ற அவர் அண்மையில் திருமணம் நடந்த பாஜக மாநில இளைஞரணி செயலாளர் ராம்குமார்-தமிழ்வாணி தம்பதியை சந்தித்து ஆசீர்வாதம் வழங்கினார். அவருக்கு குடும்பத்தினர் சார்பில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பனங்கருப்பட்டி பரிசாக வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தின் பாஜக கட்சி பிரமுகர்களையும் தொண்டர்களையும் பங்கஜ் மோடி சந்தித்தார். மேலும் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு பங்கஜ் மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் பங்கஜ் மோடி நேற்று கமுதி அருகே உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு சென்றார். அவரை நினைவிடக் காப்பாளர் ரவி வரவேற்றார். அவருடன் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் 2024 நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான களப்பணிகளை பாஜக அமைதியான முறையில் மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பாஜக குறி வைத்துள்ள எட்டு தொகுதிகளில் ராமநாதபுரமும் ஒன்று.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pangaj Modi younger brother who worshiped Muthuramalinga deva


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->