நாட்டு படகு மூலம் கடத்தப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகள் - அதிரடி காட்டிய போலீசார்.! - Seithipunal
Seithipunal


ராமேசுவரத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு அடிக்கடி தங்கம், அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான கடல் அட்டைகள் மற்றும் மஞ்சள், பீடி இலை உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுப்பதற்காக  இந்திய கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ராமேசுவரம் அருகே வேதாளை கடற்கரை பகுதியான குற வன்தோப்பு கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தது தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் கடத்தல் கும்பல் நாட்டுப்படகில் பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்றுவிட்டனர்.

இது குறித்து இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்ததன்பேரில் கடலுக்குள் சென்ற இந்திய கடலோர காவல் படையினர் கடத்தல் பொருட்களுடன் வந்த நாட்டுப்படகை நெருங்கினர். இதைப்பார்த்த படகில் இருந்தவர்கள் ஒரு சில மூட்டைகளுடன் கடலில் குதித்து தப்பினர். 

இருப்பினும், அந்த படகை பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல் படையினர் அதில் சோதனை செய்ததில், 18 மூட்டைகளில் பல லட்சம் மதிப்புள்ள வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் படகுடன் மாத்திரை மூட்டைகளை கரைக்கு கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர். 

அந்த விசாரணையில். பறிமுதல் செய்யபட்ட நாட்டுப்படகு பாம்பன் பகுதியைச் சேர்ந்த வெனிஸ்டன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. பின்னர் இந்திய கடலோர போலீசார் தலைமறைவான படகு உரிமையாளர் மற்றும் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களை தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pain killer tablet kidnape to sri langa from ramesharam


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->